பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பாண்டிய மன்னர்

யக்ஷம், அனுமானம், உவமானம், ஆகமம், அருத்தர்பத்தி, ஸ்வபாவலிங்கம், ஐதிஹ்யம், அபாவம், பாரிசேஷம், சம்பவம் என்ற பத்தாம். பிரத்தியக்ஷம் ஐம்புலவறிவால் உணர்ந்த இன்ப துன்பங்கள் அடையுநிலை; அனுமானம், பொது எச்சம் முதல் என மூவகைப்படும். பொதுவென்பது, காட்டில் யானைப் பிளிற்றொலி கேட்டு யானையுண்டு என அறிதல். எச்சம் என்பது, வெள்ளம் வருவதைக் காண்பதால் மழையுண்டு என அறிதல். முதல் என்பது, கருக்கொண்ட மேகத்தைக் கண்டு இது மழைபெய்யும் என்பது. இவ்வாறு கண்டவொன்ரைக் கொண்டு காணாப்பொருளின் உண்மையை ஊகித்துணர்வது அனுமானமாம். உவமானமாவது, ஒன்று போல ஒன்று இருப்பதால் உணர்தல். ஆகமப் பிரமாணம், ஆப்த வாக்கியமாகிய வேத சாஸ்திரங்களிற் கூறப்பட்டிருப்பவற்றை நம்புதல், அர்த்தாபத்தி, கங்கையின்கண் இடைச்சேரி என்றாற் கங்கைக் கரைக்கண் இடைச்சேரி என்று உணர்தல். ஸ்வபாவலிங்கம் என்பது யானையின் மேலிருப்பவன், ‘ஒன்று தா,’ என்றால், தோட்டியைத் தந்து உதவுதல் போல உள்ள இயல்பாம். ஐதிஹ்யம் என்பது, உலகத்தார் பேச்சு. ‘இம்மரத்திலே ஒரு பேய் உண்டு,’ என்று உலகினர் கூற, பலர் அஃது உண்டெனத் தெளிதல் போலாம். அபாவம் என்பது, ஒரு பொருள் இல்லை யென்று உணர்தல். பாரி சேஷம் எனப்பட்ட மீட்சி யென்பது, “இராமன் வென்றான் என்றால், இராவணன் தோற்றான் என்று அறிதல் போல்வது. சம்பவம் என்பது, இரும்புக் கம்பியின் சலனத்தால் காந்தம் அடையப்படும் என உணர்தல் போல்வது. இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் என்பதும் இதுவே. இனிப் பிரமாணாபாசங்கள் எட்டு உள. அவை சுட்டுணர்வு, திரியவுணர்தல், ஐயம், தேராது தெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு, உணர்ந்ததை யுணர்தல், நினைப்பு என்பன.