பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பாண்டிய மன்னர்

யால் அறிவு உதிக்கும். பூதங்கள் பிரிந்தால், அறிவும் ஒழியும் உயிரற்ற உணர்வில்லாத பூதமும் உயிருள்ள உணர்வுள்ள பூதமும் அவ்வப்பூதங்களின் வழியிலே பிறந்து வளர்ந்து பிரிந்து அழியும். இதுவே உண்மை. இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறவியிலேயே காணல் உண்டு. மறுமை ஒன்று உண்டாய் வினைப் பயன் துய்த்தல் என்பது பொய்யே.”

மீமாஞ்சகர்:- “நித்தியம், அபௌருஷேயம் எனப்பட்ட வேதங்களை ஓதித் தர்மம் யாதென ஆராய்ந்தறிலே நமது முதற் கடமை. தர்மம் என்பது வேதத்தில் சொல்லப்பட்ட யாகாதிகளைச் செய்தலே. விரும்பப்பெறும் பலனுக்கேற்றவாறு கர்மத்தைச் செய்ய வேண்டும். தர்ம முறைப்படி, கர்மம் செய்தால், அபூர்வம் என்ற அதீந்திரிய சக்தி ஒன்று பிறக்கும். இதனுதவியால் ஜீவனுக்கு இஷ்டப் பிராப்தி ஆகும். அந்தமாகவும் விவிதமாகவும் வெவ்வேறாகவும் நித்தியமாகவும் உள்ள ஜீவ ராசிகளுக்குத் தர்மமே கர்த்தவ்யமாம். ஒவ்வொரு ஜீவனும் ஈஸ்வரானுக்கிரகம் எதிர் பாராமலே கர்மப்பயனாகக் கதி வேறுபட்டு மோக்ஷ சாம்ராஜ்யம் அடையலாம்.”

வேதாந்தி:–“நித்தியப் பொருள் ஒன்றே. அஃது ஆத்துமா என்பது. நீ நான் என்ற வேற்றுமை யுணர்ச்சியும், பரமாத்துமா ஜீவாத்துமா என்ற வேற்றுமை யுணர்ச்சியும் அஞ்ஞானத்தால் ஆவன. ஞானம் உதயமானதும், ஒன்றே உண்டு என்பதும், அஃது ஆத்துமாதான் என்பதும் விளங்கும். பிரம்மம் என்பதும் அதனை அறிபவன் அறிவு என்பதும் வெவ்வேறெனக் கொள்வது மயக்கமாம். ஒரு பொருளே சத்து, சித்து, ஆனந்தமாய் விளங்குவது. அது குணங்களற்றது; குண சம்பந்தத்தால் மயங்கிய நிலையில் ஜீவ ஸ்திதியில் உள்ள நம்மால் அறியப்படாதது. மாயை