பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

37

ஒழிந்து ஆத்தும ஸ்திதி யடையும்போது உண்மை விளங்கும். தோன்றும் பொருள்களைப்பற்றி உண்மை யாராய்ந்தால் அன்றி இந்நிலை கிட்டுவது எளிதன்று பரிசுத்தாத்துமாவாகிய பிரம்ம வஸ்து, மாயா சம்பந்தப்பட்டு இயற்கைக் குணம் மாறும்போது ஈஸ்வானாவன். ஈஸ்வரனே சிருஷ்டி கர்த்தா. இது சகுணப் பிரம்மம் சரீரங்களில் அகப்பட்டிருக்கும் ஆத்துமா, தன் சுய நிலை மறந்து மயங்கிய வாழ்வினின்று நீங்கி உண்மை யுணர்ந்து, ‘நானே பிரம்மம்’ என்று உணர்வதே மோக்ஷம். ஈஸ்வர ஸ்தோத்திரம் செய்தலும், யாகாதிகள் செய்தலும், வியாவஹாரிக தசையில் பொருத்தமே; பாரமார்த்திக தசையிற் பொருந்துவனவல்ல. சகுணப் பிரம்மமாகிய ஈஸ்வரனும் கற்பிதனே யாகையால், அழி வுடையவனே. ஆகையால், ஆனந்த மயமாகிய அத்விதீய பிரம்மத்தை அறிந்து, அது தானேயாக இருக்கும் நிலை அடைய முயல்வதே இம்மதத்தின் முக்கிய நோக்கம். இதுவே மோக்ஷ மார்க்கம்.”

அறிஞர்களாகிய பலவகை மதவாதியர்களும், இவ்வாறு தத்தம் கொள்கைகளை விளங்கவுரைத்த உண்மைப் பொருளுரைகளை அமைதியோடும் முக மலர்ச்சியோடும் கேட்டுக்கொண்டிருந்த பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆனந்த மேலீட்டால் தனது ஆதனத்தினின்று எழுந்து நின்று, அறிஞர்க் கெல்லாம் உபசாரம் செய்வித்துப் பின் வருமாறு பேசினன்:

“அன்பர்களே, அறிஞர்களே, பல வகை மதங்களிற் பற்றுக் கொண்ட புண்ணிய சீலர்களே, நீவிர் பேசிய பொருளுரைகளால் யான் அறிந்துகொண்ட உண்மைகள் பலவாம். பிரத்தியக்ஷம் ஒன்றையே பிரமாணமாய்க் கொண்ட சிலரை