பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பாண்டிய மன்னர்

யொழிய, மற்றவர் எல்லாம் நாட்டுக்கு நன்மைவிளைப்போரே. பிரத்தியக்ஷப் பிரமாணம் கொண்டவர்களும் நாட்டுச் சட்டங்கட்கு உட்பட்டுத் தரும நெறி பிறழாது நடக்கும்வரையில் நமக்கு அவர்கள் மேற் பகை கொள்ள உரிமையில்லை. ஆயினும், அவர்களே மேலும் மேலும் உண்மையை ஆராயக்கூடிய அறிவாளர்களாகையால், இந்நிலையிலேயே நிற்பார்கள் என நான் நினைக்கவில்லை. பொது வகையில் மனிதன் தன்னிலும் உயர்ந்ததொரு பொருளைத் தேடி அறிய முயல வேண்டுவதேன்? தன்னையும். தன்னைச் சுற்றியுள்ள உலகங்களையும் உயிர்களையும் அவன் பார்த்ததும், காரணப்பொருளாக ஒன்று இருக்க வேண்டும் என அறிவால் ஆராய்ந்தறிய நேர்ந்தது. அவரவர் அறிவின் அளவுக்கேற்ப ஆராய்ச்சியும் உண்மையுணர்ச்சியும் தோன்றலாயின. அதனால், மதங்கள் பலவாயின. உலகில் வாழும் நிலையில் தருமம் அதருமம் என்ற நெறியை உணர்ந்து, நன்னெறியிற் செல்லும் பொருட்டுத் தூண்டுவது ஒவ்வொரு மதத்துக்கும் முக்கிய நோக்கமாம். இந்நோக்கம் நிறைவேறுமாயின், நாஸ்திக மதமும் நாம் விரோதிக்கத் தக்கதன்று, எவரெவர் கொள்கை எவ்வெந்நிலையில் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டின் குடிகள் என்ற நிலையிலும் மக்கட்டொகுதியில் ஒரு பெரும்பகுப்பினர் என்ற நிலையிலும் நாம் அனைவரும் ஒரே எண்ணம் உடையவர்களாய் நல்வாழ்வுபெற நாட வேண்டுவதே நம் கடமையாம்.”

அரசர் பெருமான் பேசி முடிந்ததும், அரசவைப் புலவர் தலைவர் எழுந்து நின்று, பின்வருமாறு பாடினர் :

ஒன்றோ பலவோ வுளதோ விலதோ
எனவே யெவரும் எய்யாப் பொருளின்

உண்மை நிலையினை யுய்த்துணர் கருத்தாற்