பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

41

சஞ்சரித்து, நல்லோர் பலர் கூட்டுறவுபெற்று, நற்குணங்கட்கெல்லாம் நிலைக் களமாய் இருந்தவர்; புலமையின் சிறப்பை உலகறியச் செய்யும் வறுமையும் தம் உரிமையாய்ப் பூண்டவர்; இறைவன் திருவருள் வயத்தால் இன்ப துன்பங்கள் எய்துவனவென்று எண்ணி எவர்க் கும் தெய்வத்திறத்தை அறிவிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்; வேதங்களையும் வேத வொழுக்கத்தையும் அதனைப் பின்பற்றி யிருப்போரையும் பெரிதும் புகழ்ந்து போற்றும் இயல்பினர். இத்தகைய பெரியார், ஒருவரையேனும் வறிதே புகழும் தன்மை யின்மையால், புகழ்தற்குரிய குணங்கள் வாய்ந்தவனாகிய பல்யாகசலை முதுகுடுமிப் பெருவழுதியை அடைந்தார்.

புலவருட் பெரியாராகிய காரிகிழார் வருகையைச் செவியுற்ற அரசர்பிரான் அரண்மனையின் ஒரு பகுதியாகிய புலவர் அவைக்களம் அடைந்து, தகுந்த ஆதனத்தில் அமர்ந்து, அங்கு முன்னே வந்தமர்ந்து நூலாராய்ச்சி செய்துகொண்டிருந்த அறிஞர் பலராலும் வாழ்த்தப் பெற்றான். இந்நிலையில் புரவலனும் பிற புலவரும் புலக்களத்தில் அமர்ந்திருக்கும்போது உரியவரால் வழி காட்டப்பெற்றுக் காரிகிழார் அங்கு வந்தார். அரசன் அவர்க்கு நல்வரவு கூறித் தனக்கு அருகிலிருந்ததோர் ஆதனத்தை அளித்தனன். ஆங்கிருந்த பிற புலவர்களும் அவரை முக மலர்ச்சியோடு வரவேற்றனர்.

பாண்டியன் முகலர்ச்சியோடு அவரை நோக்கி, “பெரியீர், தமிழ்ச்செல்வத்தை எம் போன்றார்க்கு உதவும் பெருந்தகைமை வாய்ந்த வள்ளலராகிய நும் போன்றாரைக் காணக் கிடைப்பதே எமது பாக்கியம். நுமது