48
பாண்டிய மன்னர்
டது. நினது குடை பாரததேயம் முழுவதும் நிழல் செய்வதாய் வடவரும் பிறரும் வணங்கத் தக்கதாய் ஓங்கி யுயர்ந்ததாய் இருப்பினும் என்ன வுயர்வு வரினும் பணிதற்குரியாரைப் பணிதலும் அரசர் கடமையாம் ஆதலால், சிவாலயப் பிரதக்ஷிண சமயத்திலும், முனிவரை வணங்கும் காலையிலும் பணிகவெனவமைத்தது,
‘எல்லார்க்கும் நன்றம் பணிதல் அவருள்ளும்
என்ற உண்மையைக் கருதியே யாகும், எந்நாட்டிவரும் தம் அரசன் பிறர்க்கு வணங்கா முடியனாய் இருப்பதே பெருமையெனக் கருதுவாராயினும், அவன் முடியும் வணங்கற்குரிய இடம் உளது என அவன் அறியற்பாலனாகையால், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அறவோராகிய அந்தணர் ஏந்து கையெதிரில் அவரது வாழ்த்துப் பெறுமாறு இறைஞ்சுக வென்று கூறப்பட்டது. வேத விதிபற்றி நாட்டவர் நடக்கவென ஆணை பிறப்பித்ததோடு வைதிக முறையால் அநேக யாகங்களையும் நிறைவேற்றிய மன்னனாகிய நின்னை நான் மறை முனிவரை வணங்கி வாழ்வு பெறுகவென்று கூறியது பொருத்தமேயன்றோ ? நின் தலை மாலை நாண்மலர் மாலையாய் வாடா மாலையாய் இருக்கவெனப் பிறர் வாழ்த்துவாராயினும், புலவர் பலர்க்கும் ஈந்துவக்குமாறு வேண்டிய பொருளைப் பெறக்கருதி அயல் நாடுகளோடு நீ போர் செய்கையில் முறையறியா தாரைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் பொருட்டுத் தீயார் வாழும் இடங்களில் தீயிட வேண்டி நேரிடுமாதலால், அவ்வாறு எழும் புகையால் கண்ணி வாடுக என அமைக்கப்பட்டது. இவ்வாறு அறமும் மறமும் புரிந்து பொருள் பெறும் நினக்கு இன்பவாழ்வும் நன்கமைகவெனப் பெண்டிர்பிணக்கின்
- ↑ திருக்குறள் - செய்யுள், 125.