பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பாண்டிய மன்னர்

ருலக வாழ்வும் இவ்வின்ப வாழ்விற் சிறந்ததாகாது என்பது அறிவுடையோர் கொள்கையன்றோ? இன்றே தமிழ்த் தெய்வத்தின் பெருந்திருநாள் என்னலாம், என்று கூறி ஆதனத் தமர்ந்தார்.

அரசன் அவர்க்கு முக மலர்ச்சியால் உபசாரம் செய்த பிறகு காரி கிழாரை பார்த்து, “புலவர் தலைவரே, நுமது செய்யுளையே சிறந்த தென்கோ! அதற்கு நீவிர் உரைத்த உரையையே சிறந்ததெனப் பாராட்டு கோ! நாட்டின் நன்மையின் பொருட்டு நும் போன்ற பெரியோர்கள் வாழ்த்துரை கூறுவது சிறப்பேயன்றோ? இச்செய்யுள் எனக்கு வேண்டுமளவு அறவுரை கூறுவ தாய் அமைந்திருப்பது கண்டு ஆனந்திக்கின்றேன். நும்மனைய பெரியார் துணிந்து இவ்வாறு அறிவுரை புகன்றிலரென்றால், அரசென்னாம்? அரசன் என்னாவன்? குடி மக்கள் வாழ்வு என்ன ஆகும்?” என்றான்.

காரி கிழார் மறு முறையும் எழுந்து, “அரசே, இச்செய்யுள் நின்னை வாழ்த்தவே எழுந்ததாயினும், நின் நிழலின் கீழ் வாழும் குடி மக்களையும் வாழ்த்துவதாம் அரசன் உயிரும் குடிகள் உடலும் ஆக அமைவராகையால் உயிரை வாழ்த்துவது உடலுக்கும் அமைவதன்றோ? உயிராகிய அரசன் அற நெறி கடைப்பிடித்துப் பொருள் வளஞ் சிறந்து இன்ப வாழ்வு பெற்று வீட்டின்பம் பெற வுரியனாகுக வென்று வாழ்த்துவதால், உடலாகிய மக்களும் அவ்வாழ்வு பெறுகவென வாழ்த்தியதேயாம் அன்றோ? அரசனிடம் அறமில்லை யென்றால், நாட்டில் நிலைக்குமா? அவ்வாறே பிற வுறுதிப் பொருள்களும் அவனை அடிப்படையாய்க் கொண்டன்றோ உலகிற்கு வருவன? ஆகையால், இச்செய்யுள்