54
பாண்டிய மன்னர்
அவர் ஆங்கு வாழ்ந்தனர் எனத் தோன்றியது. இத்துணைச் சிறந்த இன்பப் பேற்றை அடைந்து வாழ்ந்திருந்த அம்முனிவர் சடுதியில் எழுந்து நின்றார். அவர் அவ்வாறு நின்றதற்குக் காரணம் அவரருகில் அவரளவே வயதுள்ள சிறந்த போர் வீரன் ஒருவன் வந்து நின்றதேயாம். அவன் வில்லும் அம்பறாத் தூணியும் வாளும் தோலும் தாங்கி, மிகவும் கம்பீரமாய் விளங்கினன்.
தவச் செல்வர் அவனைக் கண்டு எழுந்து நின்றது. என்ன காரணத்தால் என்பது அவ்விருவர்க்கும் இடையில் நிகழ்ந்த பின் வரும் சம்பாஷணையால் விளங்கும்:
முனிவர்:--வருக! வருக!! மாற, வருக! நின் வரவு நல்வரவாகுக. சமீப காலத்தில் உனது நிலைமை சிறிது மாறுபாடு அடைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஏற்ப நான் வரவேற்கக் கூடாமைக்கு மன்னிக்கவும்.
மாறன்:- முனிவரே, தற்காலம் இருக்கும் நிலையில் - நான் நும்மை முன்புபோல் உரிமை முறையால் அழைக்கக் கூடாதாயினும், நான் வேண்டும் வரத்தைப் பெற்றுக்கொண்டு போகலா மன்றோ?
முனிவர்:-- அன்ப, மாற, நீ கேட்கும் வரம் கொடுக்கத் தக்க தவச்சிறப்பை நான் இன்னும் தேடிப் பெற்றிலேன், நமது ஆசிரியரிடம் கல்விச் செல்வம் பெறும் பணி நிறைவேறிய பிறகு நம் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கச் சென்றேன்; பல புண்ணிய க்ஷேத்திரங்களையடைந்து, மூர்த்தியைத் தரிசித்தேன்; தீர்த்தங்களிலே ஆடினேன்; மோன விரதம் பூண்ட பெரியார் பலரையும், அடைந்தார்க்கு அவரவர் பக்குவ நிலைக்கேற்ப அருள் பொழியும் ஆன்றோரையும் தரிசித்தேன்; நம் நாட்டிலே பல விடங்களிலும் சென்று