பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பாண்டிய மன்னர்

வரையும்‌ அவ்வக்குணங்களால்‌ நீ நிகர்ப்பாய்‌ ஆதலால்‌, உன்னால்‌ ஆகாததோர்‌ அரிய செயலும்‌ உளதோ? அதனால்‌, இரவலராய்‌ வருவார்க்கு அருங்கலங்களைக்‌ குறைவின்றி ஈந்த, யவனர்‌ நல்ல கலங்களிலே தந்த மணமிக்க தேறலைப்‌ பொற்கலங்களிலே எந்தித்தினந்தோறும்‌ பெண்டிர்‌ கொடுப்பப்‌ பருகி மகிழ்ச்சி மிக்கு அவ்வாறே இனிது வாழ்க, ஓங்கிய வாட்படை தாங்கிய நன்மாறனே, அகன்ற இடமுள்ள விண்ணகத்தில்‌ பரந்த இருளை அகற்றும்‌ சூரியன்போலவும்‌ சந்திரன்போலவும்‌ இவ்வுலகம்‌ உள்ள காலம்‌ எல்லாம்‌ நின்று நிலைபெறுவாயாக.

அரசன்‌ :-- புலவரேறே, நும்மால்‌ ஆகும்‌ உதவி இவ்வளவேயோ? இக்கருத்துக்கள்‌ செய்யுளில்‌ அமைவது சிறப்பாய்‌ இருக்குமே! நுமக்கும்‌ எமக்கும்‌ பெயர்‌ சிறப்ப எதிர்காலத்திற்‌ பிறர்‌ எண்ணி யியம்ப ஏற்றவுதவியாகவும்‌ இருக்குமே!

நக்கீரர்‌:-- அவ்வாறே செய்யுளில்‌ அமைத்துக்‌ கூறுகின்றோம்‌; செவி சாய்ப்பாயாக:

“ஏற்றுவலன்‌ உயரிய எரிமருள்‌ அவிர்சடை
மாற்றருங்‌ கணிச்சி மணிமிடந்‌ றோனும்‌
கடல்வளர்‌ புரிவளை புரையும்‌ மேனி
அடல்வேந் நாஞ்சிற்‌ பனைக்கொடி யோனும்‌
மண்ணுறு திருமணி புரையும்‌ மேனி
விண்ணுயர்‌ புட்கொடி விறல்வேய்‌ யோனும்‌
மணிமயி லுயரிய மாறா வேன்றிப்‌
பிணிமுக வூர்தி யோண்செய்‌ யோனுமேன
ஞாலங்‌ காக்குங்‌ கால முன்பிற்‌
றோலா நல்லிசை நால்வ ருள்ளும்‌
கூற்றொத்‌ தீயே மாற்றருஞ்‌ சீற்றம்‌