பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பாண்டிய மன்னர்

போர் தொடங்குக என ஆணையிட்டான். போர் முழக்கம் இப்படையில் முரசு எக்காளம் முதலிய வாத்தியங்களால் எழுந்தது. கொடிகளும் யானைகள்மீது பிடிக்கப்பட்டன. வீரர் படைக் கலங்களை வீசத் தொடங்கினர். இதனை அறிந்த சேர சோழரும் தம் படைகளை ஊக்கி முன்னே செலுத்தினர். போர்க் களத்தின் நடுவிலே இரு படைகளும் கைகலந்தன. இரவுக்காலத்தில் ஓய்வு பெற்றுக் குடை கொடி முதலிய ஆடம்பரங்களை இரு திறத்தாரும் உரிய இடங்களில் நிறுத்திக்கொண்டு ஏழு நாட்கள் போர் புரிந்தனர். இரு திறத்துப் படைஞரிலும் எண்ணிறந்தார் வீர சொர்க்கம் புகுந்தனர்.

பாண்டிய நாட்டுப் படைஞர் போர் வெறி கொண்டு மேன்மேலும் பாய்த லாயினர். சேரர் படையும் சோழர் படையும் சிறிது தளர்ந்தன. அப்படைஞரின் தலைவரும் தம்மால் இயன்றவளவு அவரை ஊக்கி முன்செலுத்தினர். உடம்பெங்கும் அம்பு துளைத்து ஆயிரம் புண்களாய் இருக்கும் போது மனோ தைரியமும் ஊக்கமும் எவ்வளவிருந்தும் என் செய்யலாம்? மேன் மேலும் பாய்ந்து சென்ற சிறந்த வீரர் பலர் விழுப்புண் பட்டு மாய்ந்தனர். தம் படையில் நேர்ந்த இந்நிலையைக் கண்டு சேரனும் சோழனும் சிந்திக்க லாயினர். இவ்விருவரும் தாமே முன்னணியில் வந்து போர் புரிந்தனர். பாண்டியன் நன்மாறன் அவ்விருவரொடும் ஒருவனாய் நின்று போர் செய்தனன். ஒரு நாள் முழுவதும் போர் நிகழ்ந்தது. பாண்டியன் சிறிதும் தளர்ச்சி யடையவில்லை. சேர சோழர் அம்பு துளைத்த புண்கள் பெருகச் சோர்வு அடைந்தனர்; இரவிலே பாசறை