பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பாண்டிய மன்னர்

யோடு எம் படையைச் சேர்த்து நட்பாளர் ஆய்விடுகின்றோம். நாம் மூவரும் ஒன்றாய்விட்டோம் என்று அறிந்தாற் பிற குறுநில மன்னர் தாமே வந்து வணங்கிவிடுவார். வேறு போரியற்ற வேண்டும் அவசியமும் இராது. தமிழ் நாடு முழுமைக்கும் தலைவராகியிருக்கும் பெருமை எம்மிருவரையும் ஒருவராய் நின்று எதிர்த்து வணங்க வைத்த உமக்கே ஏற்றதாம்.

சேரன்:- எனக்கும் அது சம்மதமே. அதற்கு அடையாளமாக எம் நாட்டுக்குரிய விற் கொடியைக் கயற்கொடியோடு சேர்க்க அனுமதியளிக்கின்றேன்.

சோழன்:- எனது சம்மதத்தையும் புலிக்கொடியை அதனோடு சேர்ப்பதால் நாடறிய வெளியிடுகின்றேன்.

பாண்டியன்:- இனித் தமிழ் நாடெங்கும் நலம் பெருக நாம் மூவரும் ஒரே மனத்தோடு அற நெறி கடைப்பிடித்து அரசாள வேண்டும் என்பதே எமது நோக்கம். குறுநில மன்னர் விரைவிலே வந்து பணிவர். அவரைப்பற்றி நாம் அதிகம் கவனிக்க வேண்டா. சந்தர்ப்பம் நேரிடும்போது வட நாட்டவரோடு போர் புரிந்து வெற்றி பெற நாம் அனைவரும் சித்தமாய் இருக்க வேண்டும். நீவிர் இருவீரும் இனி விடை பெறலாம்.

சேரனும் சோழனும் உரிய மரியாதைகளைப் பெற்றுத் தம் பாசறையடைந்து அன்றோடு போர் முடிந்து சமாதானம் நிலை பெற்றதாக விளம்பரம் செய்வித்தனர். படைஞர் எல்லாம் முழுச்செய்தியையும் அறிந்து தாம் பெரிய தேர்ப் படையிலே உறுப்பின ரானதைப்பற்றி