பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன் 71
மகிழ்ச்சி மிகப் பெற்று, அன்று இரவைக் கவலையற்ற உறக்கத்திலே கழித்து மறுநாட் காலையில் தத்தம் ஊர்க்குத் திரும்பினர். மன்னர் இருவரும் பரிவாரங்களோடு தத்தம் அரசிருக்கைகட்குப் புறப்பட்டனர். பாண்டிய மன்னனும் படையோடு பாண்டிய நாடு சென்றான். போர்க்களத்திற்கு அரசனோடு வந்திருந்த பலரும் மதுரைக்குத் திரும்பினர்; இரண்டு தினங்களில் மதுரையையடைந்தனர். நாட்டு மக்களுட் பெருமை மிக்க அறிவுடையோர் பல்லோர் வெற்றி பெற்றுத் திரும்பி வரும் தம் மன்னனை வரவேற்று உபசரித்தனர்; வீதிகளிலெல்லாம் தோரணங்களும் கொடிகளும் கட்டிப் பாண்டியன் நன்மாறனை வாவேற்றனர். பாண்டிய மன்னன் தண்டத் தலைவரோடும் புலவர் பெருமக்களோடும் அமைச்சரோடும் அரண்மனையடைந்து ஆத்தான மண்டபத்தில் அரியணை மீது அமர்ந்தான். அங்கு வந்தடைந்த அனைவரும் தத்தமக்குத் தகுந்த ஆதனங்களில் அமர்ந்த பிறகு, அமைச்சர் தலைவர் எழுந்து பின் வருமாறு பேசினர்:
"அரசர் தலைவரே, அறிஞர்களே, இன்று நம் நாட்டின் சரித்திரத்தில் ஒரு சிறந்த நாள் ஆகும். சில தினங்களின் முன் நாம் இங்கே ஆலோசனை செய்த விஷயம் நன்கு நிறைவேறியுள்ளது. நமது அரச பரம்பரையினர், பூர்வத்தில் இப்பாரத பூமி முழுவதையும் அடக்கி யாண்டு, ஏக சக்கராதிபத்தியம் நடாத்திய துண்டு சில காலம் நம் அரசரின் ஆதிக்கம் குறைக்திருந்தது. பண்டைய வரலாறுகளை யறிந்த எமக்கு அது பெரிதும் வருத்தம் தருவதாயிருந்தது. அவ்வருத்தத்தைத் தவிர்க்கப் பிரகிருதத்தில் நம் அரசராய் இருக்கும் வழுதியர்