இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்
75
இச்செய்யுளை அவர் பாடக்கேட்ட அரசன், அவர்க்குத் தக்கவாறு உபசரித்துப் பரிசில் அளித்தனன். வந்திருந்தோர்க்கெல்லாம், அவரவர்க்கு ஏற்ற மரியாதைகள் நடந்தன. பிறகு அரசனிடம் அனைவரும் விடை பெற்றுக்கொண்டு எழுந்தனர். அரசனும் அரண்மனைக்குட் சென்றனன். அமைச்சரும் தண்டத் தலைவரும் பிற அதிகாரிகளும் தத்தம் காரிய நிலயங்கட்கு ஏகினர். புலவர்கள் சங்கத்துக்குப் போயினார்கள். மங்கள வாத்திய முழக்கத்தோடு அன்று சபை கலைந்தது.