பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்
77
இயற்றாமை அயலவர் போரெதிர்ந்தால் ஒன்று சேர்ந்து தாங்குதல் முதலிய உடன்படிக்கைகள் செய்துகொண்டிருந்தாலன்றி இத்துணை யரசுகள் இருப்பதால் விளையும் நன்மையைக்காட்டிலும் தீமை அதிகம் அன்றோ? பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாரத பூமி முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டதால், நாடெங்கும் ஒரு மொழி தலையெடுத்தோங்கவும் அற நெறி ஒரு படித்தாய் எங்கும் ஆணை நடத்தவும் செய்து அரசியற்றினன். அவ்வாறு இல்லாத பிற பாண்டியர், தாம் இருந்த இடமும் பெயரும் பிறர் அறியா வண்ணம் மறைந்தனர். இவ்வுண்மையை யுணர்ந்த நன்மாறன் போராற் பிறரைத் தனக்குக் கீழ் அடக்கி நாடெங்கும் ஒரு குடையும் ஒரு கொடியும் ஓர் அரசும் ஆக்கத் துணிந்தது பொருத்தமேயன்றோ?
மும்மலையும் முந்நதியும் முப்பதியும் முக்கொடியும் மூவரசும் கொண்ட மூன்று நாடுகட்கும் நன்மாறனே தலைவனாயினன். எஞ்சியிருந்த சில தமிழ வரசரோடு போரியற்றத்துணிந்து தண்டத்தலைவர் ஆணைக்கடங்கும் பெரும்படை யொன்றை அனுப்பினன். அப்படை தமிழ் வழங்கும் நாடுகளில் தனித் தலைமை கொண்ட ஒவ்வொரு சிறு நாட்டையும் தாக்கிப் போர் செய்து சென்ற விடமெல்லாம் சிறப்பும் வெற்றியும் பெற்று, நாடு நோக்கி வந்தது. இவ்வாறு போர் செய்து அடக்கப்பட்ட நாடுகளில் உள்ள பல புலவரும் தத்தம் நாடுகளில் தாம் தாம் காண நேரிட்ட போர்த் திறங்களைப்பற்றிப் புனைந்து பாடுவாராயினர். அவர் தம்மை யாதரித்த சிறு சிறு தலைவர்க்கு நேர்ந்த நஷ்டத்தைக் கண்டு பெரிதும்