பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பாண்டிய மன்னர்


மனமுளைந்தனராயினும், தமக்கெலாம் பெருந்தலைவனாகத் தமிழ் மன்னனாகப் பேரரசன் ஒருவன் அமைந்ததைக் கண்டு மகிழ்ந்தனர். அவ்வண்ணம் மகிழ்ந்த புலவர்களுள் ஒருவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் என்பவர். அவர் பாண்டிய நாடு நோக்கி வெற்றியோடு திரும்பி வரும் படைகளோடு தாமும் நன்மாறனைக் காண வந்தனர்.

போர்ச் செய்தி இவ்வாறு நன்று நிறைவேறியது கேட்ட பாண்டியன், வேறொன்றிலும் நினைப்பிலனாய், மேலும் மேலும் போரியற்றி அயல் நாடுகளையும் வெல்ல இயலுமோ என்று ஆராயும் கருத்தினனாய், அரசவையில் அமர்ந்திருந்தான். அமைச்சரும் தண்டத் தலைவரும் அரசன் கருத்துக்கு மாறுபடா நிலையில் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தனர். அரசன் இந்நிலையில் இருக்கையிற் காரிக்கண்ணனார் அரண்மனை வாயிலுக்கு வந்து, தமது வருகையை யவனர் மூலம் தெரிவித்தனர். புலவர்களை எக்காலத்தும் வரவேற்கும் இயல்புடையனாய் இருந்தானாகையால், மன்னன் அவர்க்கு அங்குவர ஆணையனுப்பினன். பல திறப்பட்ட வாயில்களிலும் உள்ள காவல்களைக் கடந்து, அரசன் அமைச்சரோடு இருந்த ஆலோசனை மண்டபத்தை அடைந்தனர் புலவர். சோணாட்டுப் புலவராகையால், சோழனையே மனமார வாழ்த்தும் இயல்பு உள்ளவராய் இருத்தல் பொருத்தமே யாயினும், தமிழ் நாடு முழுமைக்கும் தலைமை பூண்ட தமிழ் மன்னனிடம் தம் அன்புரிமையைத் தெரிவிக்கச் சந்தர்ப்பம் அதுவே எனக் குறித்து, அவர் அங்கு வந்தார். அரசன் அவரைக் கண்ட