பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

79


தும், உவப்போடு வரவேற்று, நக்கீரனாரையும் மருதனிள நாகனாரையும், பிற புலவர்களையும் அழைத்து வருமாறு ஆட்களை யனுப்பினன். அவர்களும் சமீபத்திலேயே யிருந்தன ராகையால், விரைவிலே அங்கு வந்தடைந்தனர். மந்திராலோசனை மண்டபமே புலவர் அவைக் களமாக மாறியது. அங்குப் பின் வருமாறு சம்பாஷணை நிகழ்ந்தது:

நன்மாறன்:--புலவரேறே, வருக! வருக!! நும் வரவு நல்வரவு ஆகுக! நமது படைஞர்கள் அயல் நாடுகளை வென்று புகழ் பெற்று வந்துள செய்தியைக் கேட்ட இவ்வமயமயத்திலே நும்மைக்காண நேரிட்டது நமது பாக்கியமென்றே எண்ணுகிறோம்.

காரிக்கண்ணனார்:- இவ்வமயத்தில் நின்னைக் காண நேர்ந்தது எமக்கும் பெரும்பேறேயாம். தமிழ் நாடெங்கும் கயற்கொடி பறக்க வைத்த நின்னைக்கண்டு பாட வாய்த்த இந்நாளே எம் வாழ்வில் நன்னாள்.

நக்கீரனார்:--புரவலரே, புலவரே, இவ்வரும்பேரமயத்துக் கேற்பப் புலவர் புரவலரைப் போற்றுவது பொருத்தமே யன்றோ?

மருதனிள நாகனார்:-சோழ நாட்டுப் புலவர் இவ்வாறு பாண்டியர் வெற்றியினைப் பாராட்டுவாராயின், இவ்வமயத்துக்கு மிகவும் பொருத்தமாம்.

காரிக் கண்ணனார்:-- எம் நாட்டின் தனித் தலைமையை இழந்தேம் ஆயினும், எமக்குத் தமிழ் மன்னன் தலைமை கிடைத்தது. வழுதியர் பிரானே, அளக்கலாகா அருங்குணம் அமைந்த திருமாலைப்போல நீயும் எம்போற் புலவராவார்க்கு இனியனாயும், அடைதற்-