பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

83


நன்மாறன்:- அவ்வாறே போய் வருக. நீவிர் இருக்கும் நாட்டில் தமிழ்ப் பயிரை வளர்க்கும் திருப்பணி நுமதேயாம்.

நக்கீரனார்:--

‘உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.'

என்பர் பெரியோர்.

மருதனிள நாகனார்:--

'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.'

என்பதும் பெரியோர் திருவாய் மொழியே.

நன்மாறன்:- அமைச்சர்காள், பெரும்புலவர்காள், தண்டத் தலைவீர், நாமோ அயல் நாடுகளோடு போர் தொடங்கி ஒவ்வொரு நாடாக நம் ஆளுகைக்குள் அடக்கத் தொடங்கி விட்டோம். இதனால், எத்துணையோர்களின் மனக் கலக்கத்தை விளைப்போமோ! எத்துணையோரது மன மாறுபாட்டைத் தேடிக் கொள்வோமோ? எது விளையினும் விளைக. நம்மால் இயன்ற வளவுக்கும் ஆளுகைக் கடங்கிய நாட்டுள் வாழ்வார் யாவரேயாயினும், அவர்க்கு நன்மை புரியவே எண்ணினோம். இனியும் மேலும் மேலும் போர் புரியவே நேரிடுமாகையால், சமாதான காலத்தில் நடைபெறக் கூடிய சில காரியங்களை இனி நாம் கவனிக்க வியலாது, சங்கத்தையும் சங்கப் புலவரையும் நாம் தக்கவாறு ஆதரிக்கின்றோம் என்ற எண்ணம் நமக்கும் இல்லை; புலவர்க்கும் இல்லை. நம்மைத் தேடி எவரேனும் புலவர் வந்தால், வந்த அவசரத்தில் ஏதாவது மரியாதை செய்து அனுப்பு