பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பாண்டிய மன்னர்

கின்றோமே யல்லாமல், நூற்றுக் கணக்கான புலவர்களைக் கூட்டி நூல் இயற்றவும் உரை செய்யவும் நூலாராய்ச்சி செய்யவும் உதவி செய்யக்கூடிய நிலையில் நாம் இப்போது இல்லை. நமது குலத்தினரில் முன்னிருந்தோரிற் சிலர் செய்யுள் செய்யும் திறமும் வாய்ந்தவராயிருந்தனர் என்று கேள்வியுற்றிருக்கிறோம். நம் வழி வருவோரும் அவ்வாறு பலர் இருக்கக் கூடும். ஆயினும் நாம் சதா காலமும் போரிலும், நாட்டின் எல்லையை வளர்த்தலிலும், இவ்விரண்டுக்கும் வேண்டிய முயற்சிகளிலும் ஈடுபட்டிருத்தலால் தமிழ்த் தெய்வத் திருப்பணி இயற்றுதற்குச் சிறிதளவேனும் அவகாசம் பெறாதிருக்கின்றோம். இனி இவ்வளவோடு நமக்கு வயதேற வேற நமது குண வேறுபாடு முதலியவற்றால் வேறே சில தோற்றங்களும் உண்டாகலாம். அரசியற் கருமங்களில் ஈடுபடுவர்க்குப் பொழுது போக்கு என்பது வேறு வழியிலில்லை. நாமும் அரசியற் பொறையையேற்றுக்கொண்டு பல ஆண்டுகள் ஆயின. இறைவன் திருவருளால் இனியும் நம் எண்ணம் நிறைவேறவே முயல்வோமாக.

அமைச்சர்:- அரசர் பெருமானே, இப்பொழுது தொடங்கிய முயற்சி யன்றே இது! நீவிர் அரசுரிமை யேற்றுக்கொண்ட அன்றே தொடங்கிய தன்றோ? இஃது இவ்வாறே மேன்மேலும் வளர்ந்து நம் நாட்டின் புகழைப் பாரத பூமி முழுவதும் பரப்பச் செய்யும் காலம் வரும் வரையில் நாம் முயல வேண்டும். -

தண்டத் தலைவர்:- பெருமை மிக்க பேரரசே, நம் முன்னோர் காலத்திலே நிகழ்ந்ததுபோல நாமும் இம்-