பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

89

சிந்தனையைச் சிறிது நேரம் நிறுத்தி, அவரை வாவேற்கச் சித்தமாயினன். வாயிற் காவலன் புலவரை உள்ளே அழைத்து வர அனுமதி பெற்றுச் சென்றனன்.

வாயிற் காவலன் புலவர் வரும் வழிக்குச் சென்று அவரை உரிய மரியாதையோடு அழைத்து வந்தான். நன்மாறன் இருந்த அறைக்குப் புலவர் வந்து சேர்ந்தனர். அவன் முக மலர்ச்சியைக் காட்டி, “புலவரேறே, வருக! வருக!!” என்று கூறி வரவேற்றனன். அவரும் அரசனைத் தம் நிலைமைக்கேற்ப வாழ்த்தி வணங்கி, 'வழுதியர் தலைவ, தமிழர் இறையே, எத்துணையோ புலவர்களை ஆதரித்து எண்ணிறந்த தமிழ்ச் செய்யுட்களை உலகிற்குதவிய பாண்டியர் குடியிலே தோன்றிய நின்னை இந்நாள்காறும் நேரிற் கண்டு புகழ்ந்து பாடும் பேறு பெற்றிலேம். சோழ நாட்டுப் பிறந்து வாழ்வேமாகையால், இந்த இன்பப்பேறு கிடைக்க எமக்கு இத்துணை நாள் ஆயது. இன்றே எம் வாழ் நாளிற் சிறப்புற்ற நாளாம். தமிழ் நாடெங்கும் ஒரு தலைமைக் கீழ் ஆளும் பெருமை பெற்ற தமிழ் மன்னனே, அரசர் இயற்றவுரிய அறங்களிலெல்லாம் தலை சிறந்தது நாட்டு மக்களின் அறிவை வளர்த்து அற நெறியிற் செலுத்த முயற்சி செய்தலேயாம். போர் இயற்றலும் பிற நாடுகளைத் தன் வசப்படுத்தலும் அரசன் கடமையேயாமாயினும், அவ்வாறடக்கிய நாடுகளில் வாழும் குடிகள் எல்லாம் அமைதியோடும் அரசனிடம் அன்போடும் வாழுமாறு செய்ய வேண்டுவது அதனினும் சிறந்த கடமையாம். வாட்படையும் வேற்படையும் வில்லும் அம்பும் அரசின் பெருமைக்கு உதவுவனவேயாம். ஆயி-