பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


1. வாழ்வும் வழியும்

உயிரின் பெருமை

வாழப் பிறந்திருக்கிறோம் நாம்!

ஆம் நீர்க் கடலின் அலைக் கூட்டங்களின் ஓட்டம் போல, நமது வாழ்க்கை நிகழ்ச்சிகள் அன்றாடம் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே பேரானந்தமாக விளங்கும் காலம்தான், நமது வாழ்க்கை. அந்த காலத்திற்குள்ளே எத்தனையோ சிறப்புக்கள், சிக்கல்கள் சேர்ந்திருக்கின்றன, தேர்ந்திருக்கின்றன.

கலை எழில் மிகுந்த நமது உடலில், களிநடனம் புரிந்துகொண்டிருக்கும் உயிர், நமது விழிகளால் காண முடியாததுதான். என்றாலும், விலை மதிக்க முடியாத ஒன்றாகும்.

மண்ணைப் பிளந்தவர்கள், விண்ணை அளந்தவர்கள்,எண்ணிலும் எழுத்திலும் எத்தனையோ ஏற்றம் புரிந்தவர்கள் இன்றைய அறிஞர்கள் என்றாலும், உயிரினைப் பற்றிக் கூற வரும் பொழுது, சற்று ஒதுங்கித்தான் போகின்றார்கள்.

விஞ்ஞானிகளும், மெய்ஞானிகளும், மற்றும் அஞ்ஞானிகள் என்பாரும் வியந்து பாராட்டுகின்ற