பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

9


ஒன்றாகத்தான் உயிர் இருக்கிறதே தவிர, முயன்று பார்ப்போருக்கு முடிவில்லா குன்றாகத்தான் தோன்றி மறைகின்றது.

நமது நம்பிக்கை

விளையாடும் உயிரோடு எழிலாடும் நமது உடல், எத்தனை நாள்வாழும் என்று யாருக்குத் தெரியும்? நேரக் கணக்குக்கும், நிமிடக் கணக்குக்கும் கூட பிடி கொடுக்காத உயிரைப் போற்றித்தான் நாம் வாழ்கிறோம். நம்மால் வாழ முடிகிறது. வேறு என்ன நம்மால் செய்யமுடியும்!

இன்னும் இருப்போம் என்ற நம்பிக்கை நமக்குள் அமுத ஊற்றாக ஊறிக்கொண்டிருக்கிறது. 'இயற்கையாகத்தான் நமது வாழ்வு முடியும்' என்ற ஒர் இனிய நினைவும் மனதிலே பீறிட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இயற்கையாகவே மனிதர்கள் இறந்து போகின்றார்கள் என்று நம்மால் எவ்வாறு சொல்லமுடியும்?

முதுகில் ஏறி சவாரி செய்யும் முதுமையின் கொடுமையைவிட, பதமாக வந்து நம்மை பாழ்படுத்தும் நோய்கள் கூட்டம் வேறு இருக்கின்றனவே! நோயின் வாய்பட்டு இறப்பதைக் காட்டிலும், வேறு வகையில் இறப்பாரின் கணக்கே, இன்று மிகுதியாகிக் கொண்டு வருகிறது.

வேறு வகை என்றது - விபத்துக்களைத்தான்.

வாழ்க்கையிலே விஞ்ஞானத்தால் வசதிகள்