பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


பெருகிவரவர, அவைகளின் கூடவே அபாயமும் பேராபத்தும் இலைமறை காயாக, நீறு பூத்த நெருப்பாகத் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன!

விளையாடும் விபத்துக்கள்

இயற்கையால் எழுகின்ற நில நடுக்கம், பூகம்பம், காட்டுத்தீ, கடல் கொந்தளிப்பு, பெருமழை, பொங்கும் வெள்ளம், கொள்ளைநோய் போன்றவைகள் எங்கோ ஒரிடத்தில், எப்பொழுதோ ஒரு சமயத்தில்தான் நிகழ்கின்றன. அவற்றில் மனித இனம் மடிவதுண்டு.

ஆனால், அன்றாடம் பத்திரிகையிலே வருகின்ற செய்திகளைப் பார்த்தால், போர்க்களங்களிலே மடிகின்ற மனிதர்களைவிட, விபத்துக்களிலே இறப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று அரசாங்க அறிக்கைகள் கூறுகின்றன.

நாடு பூராவும் நிறைந்தே கிடக்கும் இந்த விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன? மூன்று வினாடிகளுக்கு 1 முறை சாலைகளிலும், 8 வினாடிகளுக்கு ஒரு முறை வீடுகளிலும் விபத்துக்கள் நேர்கின்றன என்று நாம் அறியும்போது இந்த விபத்துக்கள் எப்படித்தான் ஏற்படுகின்றன என்று அறியும் ஆவலைத் துண்டுகின்றன அல்லவா!