பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கொண்டதே கோலம் என்ற முறையில் நடந்து கொள்வது.

உதாரணமாக மின்சாரம், அதைப்பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் கைவைத்தால் 'ஷாக்' அடிக்காதா அதுபோல்தான் பிற செயல்களிலும் சிக்கிக் கொள்ளுதல்.

2. ஒழுங்கற்ற செயல்கள்

உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், ஊதாரித் தனமான நினைவுகளுடன் காரியங்களை செய்வது விபத்துக்கு வழிகோலுவதாகும்.

ஒரு காரியத்தில் ஆபத்து உண்டென்று தெரிந்து பிறகும் 'நாம் செய்துதான் பார்ப்போமே. நம்மை மீறி என்ன நடந்துவிடும், என்கிற அசட்டுத் தைரியம்.

'என்னால் இதைச் செய்ய முடியாதா என்று முடியாத ஒன்றை முண்டிக்கொண்டு புரியாமல் செய்யும் மடத்தனமான முயற்சி.

'பிறரைப்போல நான் என்ன ஒன்றும் தெரியாதவனா? பிறர் மெச்ச என்னால் செய்ய முடியும் என்ற வீறாப்பு, அகம்பாவம்.

இவைகள், ஒருவரது அறிவை அணைத்துவிடுவதுடன், ஆணவத்தையும் பெருக்கி, விரைவாக செயல்பட வைத்துவிடுகிறது. கண்மூடித் தனமான வீரம் அவரைக் கட்டவிழ்த்து விடுகிறது.

எதையும் கூர்ந்து பார்க்காமல், மேலோட்டமாக நினைத்து, செயல்படுகின்றபோக்கு, எளிதில் விபத்துக்கு