பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

13


வித்திட்டுவிடுகிறது.

3. பாதுகாப்பற்றப் பழக்க வழக்கங்கள்

வளர்ந்து வரும் நாகரீகத்தால், பழக்கவழக்கங்கள் அனைத்தும் மாறிக்கொண்டே வருகின்றன. பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைகளும், அகலமில்லாத சாலைகளில் நெருக்கடியான வாகனப் போக்குவரத்துக்களும், எந்திரப்பெருக்கமும், எடுத்ததற்கெல்லாம் முன்னோடிவரும் மின்சார சாதனங்களும், புதிய பிரச்சினைகளைத்தான் பிறப்பித்திருக்கின்றன.

பயணத்தை மேற்கொண்டாலும் சரி, பாங்காக வீட்டிற்குள்ளே இருந்தாலும் சரி, பரபரப்புடன் விளையாடினாலும் சரி, பாதுகாப்பான பழக்கவழக்கங்களை மேற்கொண்டால்தான் பிழைக்க முடியும் என்ற ஓர் இக்கட்டான சூழ்நிலைதான், இன்றைய வாழ்க்கை முறையாக அமைந்துவிட்டிருக்கிறது.

எனவே பாதுகாப்பு விதிமுறைகளை புரிந்தும் புரியாமலும், மறந்தும் குழம்பியும் மேற்கொள்ளும் போதும், கைவிடும்போதும், விபத்துக்கள் ஏற்படுவது இயற்கையே.

உலகத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மனித முயற்சிகளால், இன்று உலகமே மாறித் தோற்றமளிக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்தும் பழக்க வழக்கங்கள்தான். ஒருவருக்குப் பாதுகாப்பாகும்.இல்லையேல், விபத்தின் விரித்த கரங்களில் போய் விழ