பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


குழப்பத்துடன் பணியாற்றுதல்; மேற்பார்வை இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுதல்; தனக்குரிய உரிமை என்ன! கடமை என்ன என்று உணராது, மிருகப் போக்குடன் நடந்து கொள்ளல்; விதிமுறைகளைப் பின்பற்றாது மனம் போன வழியில் செல்ல முயற்சித்தல் எல்லாம் ஆபத்துக்குத்துதுவிடும் அரக்கர்களாவார்கள்.

எனவே, விபத்துக்கு வித்தாக விளங்கும் முறைகளையெல்லாம் நாம் உணர்ந்துகொண்டு, அவற்றை ஒதுக்கியும், முடிந்தவரை எல்லா நேரங்களிலும் ஒதுங்கியும் வாழவேண்டும்.

இத்தகைய இனிய வாழ்வு முறையை அமைத்துத் தருவதுதான் பாதுகாப்புக் கல்வியாகும்.