பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

17


3. பாதுகாப்புக் கல்வியும் பயன்களும்

1. பாதுகாப்பு - ஒரு விளக்கம்

உயிர் உன்னுடையது. நீ காப்பாற்றிக் கொள்ள இருக்கும் உயிர், உனக்குச் சொந்தமானது. அதனால் உன் குடும்பத்திற்கு உதவி. அதுவே அந்த சமுதாயச் செழிப்புக்கு ஆணிவேர். அந்தச் செழுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதாரம். என்று தனி ஒருவனை தகுந்த முறையில் பாதுகாப்புடன் வாழச் சொல்கின்ற. வாழச் செய்யும் வழியைக் காட்டுகின்ற கல்விதான் பாதுகாப்புக் கல்வியாகும்.

'திறமை உள்ளவர்களே உலகில் தரமாக, நிம்மதியாக வாழ முடியும்' என்ற உலக நியதியின் அடிப்படையில் தோன்றியது தான் பாதுகாப்புக் கல்வி.

தூசி விழாமல் நமது கண் இமைகள் மூடிக்கொள்கின்றன. மீறி விழுந்தாலும் கண்ணிர் கரைத்தெடுத்துத் தூய்மைப்படுத்திவிடுகிறது. மூக்கிற்குள்ளே தூசி புகுந்துவிடாமல் உள்ளே உள்ள பாதுகாப்பு முறைநோய்க் கிருமிகளைக் கொல்லக் காத்திருக்கும் வெள்ளை அணுக்கள், தூங்கும்போது நிகழ்கின்ற அனிச்சைசெயல்கள் எல்லாம், உடல் உள்ளே நிகழ்கின்ற