பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


முக்கியமான பாதுகாப்புப் பணிகளாகும்.

அந்த ஒப்பற்றப் பணிகள், சிறப்பாக உடலை உலவச் செய்கின்றன. பாதுகாக்கும் உளப்பாங்கை, உயர்ந்த அறிவை அப்பணிகள் நமக்கு ஊட்டுவதுபோல, பாதுகாப்புக் கல்வியும் அமைந்திருக்கிறது.

2. பாதுகாப்புக் கல்வியின் பணி

1. எத்தனையோ வழிகளில், விபத்துக்கள் உருவாகும் சூழ்நிலையை விளங்கிக் கொள்ளுதல்.

2. விபத்துக்குள்ளாகின்ற சூழ்நிலைகளில் இருந்தாலும், அதினின்றும் விலகி, விபத்து நேராமல் வாழ்கின்ற வழிகளை மேற்கொள்ளுதல்.

3. தான் உணர்ந்து தெளிந்துகொண்ட உண்மைகளை வளர்த்துக் கொள்வதுடன், அதுபோன்ற முறையைப் பின்பற்ற, மற்றவர்களுக்கு அறிவுறுத்தல்.

மேலே கூறிய வழிமுறைகளை தனி ஒருவருக்கு உணர்த்தி, அவரைப் பாதுகாப்புடன், பத்திரமாக வாழும் முயற்சியில் ஈடுபடுத்துவதுதான் பாதுகாப்புக் கல்வியின் சிறந்த பணியாகும்.

சந்தரப்பங்களை சாதுரியமாகக் கையாண்டு சக்தியைப் பெருக்கிக்கொண்டு, பாதுகாப்பான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு, சந்தோஷமாக வாழ வைக்கப் பிறந்த பாதுகாப்புக் கல்வி, கடலில் செல்லும் கப்பலில் இருக்கும் உயிர்ப் படகாக, விமானத்தில்