பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

19


இருக்கும் பறக்கும் குடையாக விளங்கி வருகிறது.

3. பாதுகாப்புக் கல்வியின் தோற்றம்

பரந்து எல்லையற்றுக் கிடக்கும் உலகம், தூரத்தின், அளவில் சுருங்கிவிட்டது என்று கூறுவார்கள். விரைவான வாகன வசதிகள், நேரடி பேச்சு வசதி முறைகள், மற்றும் விஞ்ஞான வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுத்தான் அவ்வாறு கூறினார்கள். மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றந்தான் இது.

என்றாலும், வசதிகளுக்குள்ளேயே மறைந்து கிடக்கும் அபாயங்களையும் மக்களினம் அண்மைக் காலத்தில், அதிகமாக சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் பயங்கர விபத்துக்களும் அதிகமாகவே உண்டாகிறதே தவிர, குறைந்தபாடில்லை என்ற மனக்குமுறல், எல்லோரிடையிலும் எழத்தான் செய்திருக்கிறது.

ஆபத்துக்களில் அதிகம் துவளும் மனித இனத்திற்கு ஆதரவு ஊட்டவும், அதனைக்காக்கவும் அறிஞர் கூட்டம் மிகுந்த அக்கறையுடன் ஆராயத் தொடங்கியது. அந்த விழிப்புணர்ச்சியின் விளைவாகப் பிறந்ததுதான் இந்தப் பாதுகாப்புக் கல்வியாகும்.

தொழில்களில் மறுமலர்ச்சி தோன்றி, தொழிற்சாலைகள் பற்பல மேலை நாடுகளில் தோன்றியதும் அதனால் நாடுகளில் புத்துணர்ச்சி பிறந்ததும். நாம்