பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அறிந்ததே!

கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தொழிலாளர்கள் பட்ட துன்பமும் துயரமும் அளவிலா. வேலையோ அதிகம், கூலியும் குறைவு, தொழிலாளர் கூட்டமோ அதிகம். அதனால் வேலைக்குப் போட்டி மனப்பான்மை, தொழிலாளர்களிடையே நெருக்கடி, அந்த நிலையில், விபத்துக்கள் அதிகமாயின, போட்டி இருந்த தால் விபத்துக்கு ஆளானோர் வேலையை இழந்தனர். அந்த இடத்தில் வேறொருவர் என்று நியமிக்கப்பட்டனர்.

விபத்துக்கு ஆளானோர், வேலையும் இழந்து, கூலியும் இழந்து, மேலும், அதற்குரிய நட்ட ஈட்டுத்தொகையையும் இழந்து தவித்தனர். தொழிற்சாலை உரிமையாளர்களின் வக்கீல்கள் சாமர்த்தியத்தால், தொழிலாளர்கள் முறையீடு எந்தவிதப் பலன்களையும் அளிக்காது போயின. "விபத்துக்குத் தொழிலாளர்களே காரணம்" என்று முதலாளிகள் சாட்டிய குற்றத்துக்கு ஆளாகி தொழிலாளர்கள் தோற்றார்கள். துவண்டார்கள். அமெரிக்காவைவிட, இங்கிலாந்தில் இந்தக் கொடுமை அதிகமிருந்தது.

இருபதாம் நூற்றாண்டு வரை, இந்த நிலை நீடித்தாலும், பிறகு, 'இன்சூரன்ஸ்' மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பெற முடிந்தது. சட்டங்கள் பல ஆதரவாகத் தோன்றின. எந்திரங்களில் இருந்து விபத்து நேரா வண்ணம். பாதுகாப்புச் சாதனங்கள் தொழிலாளர்