பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

21


களுக்குத் தரப்பட்டன.

விபத்துக்குள்ளானவர்கள், முதலாளிகளின் அனுதாபத்தைப் பெறத் தலைப்பட்டனர். பண வசதியும் பெற முடிந்தது. இதனால், விபத்துக்கள் வரவரக் குறையத் தொடங்கின.

பிறகு தான், ஒரு முறையான பாதுகாப்பு விதி முறைகள் தோன்ற ஆரம்பித்தன. அந்தப் பாதுகாப்புக் கல்வியின் முக்கிய நோக்கமானது - பாதுகாப்பு முறைகளை அதிகமாகப் புரிந்துகொள்ளுங்கள். அதன்படி நடந்து கொள்ளுங்கள். அனுதினம் சிறந்து நில்லுங்கள். என்பதுதான்.

இத்தகைய இனிய வாழ்வு தரும் பாதுகாப்புக் கல்வி முறை, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான், பள்ளிக்கூடப் பாடத் திட்டங்களில் ஒன்றாகப் புகுத்தப்பட்டுப் பெருவாரியான அளவில் முன்னேற்றமடைந்து வருகிறது.

4. பாதுகாப்புக் கல்வியும் பள்ளி மாணவர்களும்

சிக்கல் நிறைந்த குழ்நிலைகளுக்குள்ளே உலா வருகின்ற மாணவர்களும், இளைஞர்களும், சுற்றுப்புற அபாய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

அவர்கள் இளமையிலே பெறுகின்ற இந்த அறிவுரைகளும், செயல்களும், செயல் பழக்கமுறை