பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


களும், பெரியவர்களாக வளர வளர, வளர்ந்து கொண்டே வந்து பொறுப்புள்ள பொதுமக்களாக, பற்றுமிக்கக் குடிமக்களாக பத்திரமாக வாழும் வாய்ப்பினை நல்கும்.

பள்ளிகளிலும், விளையாடுமிடங்களிலும், நீச்சல் குளங்களிலும், சாலைகளிலும், மற்றும் வீடுகளிலும் அவர்கள் பத்திரமாகப் பாதுகாப்புடன் வாழ்கின்ற முறைகளைக் கற்றுக் கொள்வதால், தன்னைப் பற்றிய அறிவு, தனது கடமை, தன் கடமையின் பெருமை, அது நாட்டுக்குப்பயன்படும் தன்மையெல்லாம் விளங்கும்.

ஆகவேதான், 'இளமையிற் கல்' என்பதுபோல, பாதுகாப்புக் கல்வியையும் பாடத்திட்டமாக்கி இருக்கின்றார்கள்.

உலகம் முழுதும் இந்த முயற்சி இந்நாளில் பேரளவில் முன்னேறி வருகிறது. பெரும் பயனை நல்கி வருகிறது. மாணவர்களின் அரிய ஒத்துழைப்பினைப் பெறுகிறது. இத்தகைய முயற்சியில் ஈடுபடும் நமது மாணவச் செல்வங்களும், நாட்டின் நாளைய நாயகர்களாக, தானைத் தலைவர்களாக மாறுகின்ற போழ்தில், மாபெரும் பயனை அளிக்கும்.

5. பாதுகாப்புக் கல்வியால் பெறும் பயன்கள்

1. பாதுகாப்புக் கல்விக்குரிய விதிமுறைகளை ஆழ்ந்த விருப்புடன் கற்றுப் பின்பற்றும்போதும், தொடர்ந்து நடக்கும் போதும் ஏற்படுகின்ற பழக்க வழக்கங்கள், நாட்டின் சட்ட திட்டங்களையும் அவ்வாறே ஏற்றுப்,