பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


பின்பற்றி வாழ்கின்ற பழக்கத்தினை அளிக்கிறது.

2. தன் உரிமையை தெரிந்து கொண்டு, அதன் வழி தன்னைக் காத்துக்கொள்ள விரும்புவது போலவே, பிறரது உரிமையையும் புரிந்துகொண்டு, அவர்களை மதிக்கவும், வளர்க்கவும் போன்ற பண்புகளைத் தருகிறது.

3. இத்தகைய இனிய பழக்க வழக்கங்கள். சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதுடன், வலிமைமிக்க நாட்டையும் படைக்கின்றன.

4 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறுபோலக் கெடும் ' என்ற வள்ளுவர் வாக்கு போல, வருமுன்னர் காக்கின்ற வாழ்க்கையை வழங்கி நிற்கிறது. .

5. விளையாட்டுக்கள் மற்றும் வீரச் செயல்கள் செய்தால் விபத்து வராதா என்ற கேள்வியைக் கேட்டு விட்டு, வீணே ஒதுங்கிக் கொள்ளும் சோம்பேறிகளுக்கு, 'வேண்டிய திறமையுடன் விதி முறைகளைப் பின்பற்றிச் செய்தால் விபத்து நிகழாது தடுக்கலாம்' என்று கூறி, அஞ்சும் மனப்பான்மையை அகற்றி, விவேகத்தை வளர்க்கிறது.

6. பாதுகாப்புக் கல்வியால் இனிய சுயகட்டுப்பாடு (Self control) மிகுந்து வருகிறது.

7. அதனால், ஒன்று கூடி உறவாடுதல், ஒருவருக்கொருவர் உதவி செய்தல், பெருந்தன்மையுடன்