பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


பழகுதல், பொது இடங்களில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுதல் போன்ற சிறந்த பண்புகள் செழிந்தோங்க உதவுகிறது.

8. விபத்து ஒன்று நடந்தால், அதனால் விபத்துக்கு உள்ளானவருக்கு மட்டும் நஷ்டமல்ல. அவருக்கு உடல் வருத்தம், ஊதியம் இழப்பு. முதலாளிக்கு உற்பத்திக் குறைவு. தொழிலில் விலைவாசி ஏற்றம், நாட்டிற்கு மூலப் பொருள் இழந்து வளர்ச்சி குன்றுதல். இப்படி ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடர்போல ஒரிடத்தில் நடக்கும் விபத்து, நாட்டினை எவ்வாறு உருக்குலைக்கிறது என்று தெள்ளத் தெளிய எடுத்துரைக்கிறது.

அதனால்தான், இக்கருத்துக்களை பொதுமக்கள் உணர்வதைவிட, பள்ளி மாணவர்கள் பெரிதும் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என்று நாட்டுப்பற்றுள்ள நல்லவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். அதற்கும் காரணங்கள் உண்டு.

1. மாணவர்கள் தங்கள் உடலை நல்ல முறையில்பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.

2. எதிர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

3. பொறுப்பான மன வளர்ச்சியைப் பெறுகின்றார்கள்.

4. பிறருக்கு உதவுகின்ற நல்ல பண்பினில் திளைக்கின்றார்கள்.