பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதுகாப்புக் கல்வி

25



5. விபத்துக்களிலிருந்து விலகிக் கொண்டாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் விபத்துக்குள்ளானாலும், ஏற்கனவே அதைப்பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பதால், அதற்காக அனாவசியமாக அச்சப்படாமலும், அதே நேரத்தில் பிறரையும் அஞ்சாமல் இருக்கத் தைரியம் கூறுகின்ற தைரியம் பெறுகின்றார்கள்.

6. ஒழுங்குமுறையைப் பின்பற்றும்போது, நேர்கின்ற உண்மையான இன்பத்தின் பயனை நேரில் அனுபவித்து மகிழ்கிறார்கள்.

7. செய்கின்ற செயல் முறைகளில், குழப்பமோ கொள்கை பிணக்கோ இல்லாமல், சிறப்பாகச் செய்யும் ஆற்றலைப் பெறுகின்றார்கள்.

8. அவர்களால் விபத்தின் கொடுமையை உணர முடிகின்றது. அதாவது, விபத்து நேர்ந்து ஒருவர் சாகாமல் தப்பித்துக் கொண்டாலும், காலம் பூராவும் ஊனமுற்றவர்களாக, பார்வை இழந்தோ, பயங்கரத் தழும்பு கொண்டோ, செயற்கை கை, கால்கள் என்று கொடுமையான வாழ்வு வாழ்வதை இளமையிலே உணர்வதால்,தவிர்த்து வாழும் அறிவு தானாகவே ஏற்படுகிறது.

அத்தகைய அரிய வாழ்வையும், இனிய பயிற்சியையும் இதமாக அளிக்கின்ற பாதுகாப்பு முறைகளை மாணவர்கள் எங்கெங்கே எவ்வெவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகளையும், கட்டுக்கோப்பான