பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

27


எப்பொழுது பிரேக் போடுவது, எப்படி சமாளிப்பது என்று அறிந்து கொள்ளாத அறைகுறை ஓட்டும் பயிற்சி. குடித்து விட்டுப் போதையுடன் ஒட்டுதல். தான்தான் முந்திக்கொண்டு முன்னால் போக வேண்டும் என்ற முரட்டுக் குணம். காது கேளாத கண் தெரியாத வழிபோக்காளர்கள் தடுமாற்றம். முதியவர்களின் தள்ளாடும் வழிநடை குடும்பக் குழப்பத்தை சாலையில் போகும் பொழுதே அசை போட்டுக் கொண்டு மெய்மறந்து போவோர்.

இவர்கள்தான் சாலையில் விபத்து நேர்வதற்குக் காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர். இத்தனை குழப்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலே சாலையிலே பத்திரமாகப் போய் வருவதென்றால், அதற்கென்று இருக்கும் ஒரு சில விதிமுறைகளை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அவசியம் உண்மையோடு பின்பற்ற வேண்டும்.

ஆனவரை கடைப்பிடிக்க வேண்டும் என்று இங்கே, முதலில் சாலையில் நடந்து செல்வோர் கவனிக்க வேண்டிய விதிமுறைகளைக் காண்போம்.


2. நடந்து செல்வோர் கவனிக்க

(1) சாலையைக் கண்காணித்து, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் வழிகாட்டும் சைகையின்படிதான் செல்ல வேண்டும்.

(2) சாலையில் இருக்கும் வழிகாட்டும் விளக்கின்