பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதுகாப்புக் கல்வி

31


வருகின்ற வாகனங்கள் தங்களது பக்கம் வருகின்றனவா என்பதையும் முக்கியமாகக் கவனித்துப் பார்த்து நடக்க வேண்டும்.

(4) பச்சை விளக்கு தெரிந்தபின்னர், போகலாம் என்று முடிவு செய்தபின்னர், உறுதியுடன் முன்னேற வேண்டும். நடு சாலை வரை சென்ற பிறகு, அங்கேயே நின்றுகொண்டு, முன்னே போவதா அல்லது பின்னால் இருந்த இடத்துக்கே வருவதா என்று குழப்பத்துடன் முடிவு செய்யக்கூடாது. வந்தால், கடந்து செல்லத்தான் வேண்டும்.

(5) சாலையின் குறுக்கே நடக்கத்தான் வேண்டும் என்றால் குடுகுடுவென்று அவசரப்பட்டு ஓடக்கூடாது.

(6) சாலையைக் கடக்கும்போது, குறுகிய நேரத்திற்குள் கடந்து செல்கின்ற முறையில்தான், அதாவது நேருக்கு நேராகத்தான் நடக்க (Short Root) வேண்டும். மூலைக்கு மூலை என்பது போல, (ஆற்று வெள்ளத்தில் நீந்தும் ஒருவர் ஒரு பக்கம் குதித்து. நேரே போக முடியாமல், வெள்ளத்தோடே போய், அதிக தூரம் சென்று எதிர்க்கரையை அடைவதுபோல) சரிந்துபோய் கடக்கக்கூடாது.

(7) சாலையைக் கடக்கும்போது, வேறு எந்த யோசனையோ, கற்பனையோ, கவலையோ இருக்கக் கூடாது. சாலையைக் கடக்கிறோம், கடந்து கொண்டிருக்கிறோம் என்கிற ஒரே நினைவுதான் நினைவில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.