பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


(8) எனக்கு சாலையில் நடக்க உரிமை உண்டு. இது பொதுச் சொத்துதானே' என்று உரிமை பாராட்டி, பெருமையாகப் பேசிக் கொண்டு செல்லக்கூடாது. வாகனம் ஒட்டுவோருக்கும் இதே உரிமை நினைவு வந்து, அவருடன் நீங்கள் மோதிக்கொண்டால், உங்கள் கதி என்ன ஆகும்?

(9) பொது இடங்களில் முன் உணர்வும், பொது அறிவும் உள்ளவாறு நடந்துகொள்ளும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

மேற் கூறிய கருத்துக்கள், சாலையைக் கடக்கும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டிய விதிகளாகும்.

இனி, சாலையில் சைக்கிளில் செல்லுவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை காண்போம்.

3. சைக்கிளில் செல்வோர் கவனிக்க

1. தனது சைக்கிளில் பிரேக், பெடல், பெல், சக்கரங்கள் உட்பட சரியான நிலையில் இருக்கும் படி மிகவும் நல்ல முறையில் யாராயிருந்தாலும் வைத்திருக்க வேண்டும்.

2. சாலைகளில், சைக்கிள் செல்லுதற்குரிய ஒட்டப் பாதையில்தான் ஒட்டிச் செல்லவேண்டும். அவ்வாறு ஒட்டத்திற் கென்று தனிப்பாதை இல்லாத இடங்களில், சாலையின் நடுவில் செல்லாமலும், மிகவும் ஒரமாகவும்