பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

33


ஒதுங்கிப்போய் விடாமலும், அனுசரித்துத்தான் செல்ல வேண்டும்.

3. சாலைகளுக்கு உரித்தான விதிகள், சைகை முறைகள் போன்ற அத்தனையையும், சைக்கிள் ஓட்டுவோர் கடைபிடிக்க வேண்டும்.

4. அதிக நெருக்கமாக வரும் வாகனங்களுக்கிடையே சைக்கிள் ஓட்டுவதற்கு முயலக்கூடாது.

5. சைக்கிளில் முன்னாலோ அல்லது பின்னாலோ ஒருவர் அல்லது இருவரை ஏற்றிச் செல்வது தவறு. அது அபாயகரமான சூழ்நிலை தருவதாகும்.

6. ஒரு கையையோ அல்லது இரு கைகளையும் சைக்கிள் ஓட்டும் பிடிப்பிலிருந்து விட்டுவிட்டு, 'ஆகா எவ்வளவு எழிலாக ஓட்டுகிறார் என்று எல்லோரும் தன்னைப் புகழ்வார்கள் என்றநினைப்புடன் ஓட்ட முயலக்கூடாது.

7. நான்கைந்து பேர்களாக சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது, சாலை முழவதும் தங்களுக்கே சொந்தம் என்ற நினைவில், சாலை முழுவதும் பரவலாக ஒட்டிச் செல்லக்கூடாது.

8. வேகமாக ஓடும் கார், லாரி, ஆட்டோ ரிக்க்ஷா போன்ற வாகனங்களை முந்திச் செல்ல முயலக்கூடாது. முந்துவதற்கு நேரம் வந்தால், முறையான விதிகளைப் பின்பற்றித்தான் செல்லவேண்டும்.

9. மிதிக்கும் சக்தி இருக்கும் வரையில்தான் வேகமாக