பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


மிதித்துப் போகலாம். வேகமாகப் போக வேண்டும் என்பதற்காக, ஓடும் லாரி அல்லது காரின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டே சைக்கிளில் போகக்கூடாது.

10. எப்பொழுதும் மிதமான வேகம் தேவை. கண்ணை மூடிக்கொண்டு, காட்டுத்தனமாக சைக்கிளை மிதிக்கக்கூடாது.

11. நின்று கொண்டிருக்கும் கார்களுக்கிடையிலே சைக்கிளை ஓட்டிச் செல்லக்கூடாது.

12. ஏற்றம் இறக்கம், மேடு பள்ளம் முதலியவைகளைப் பார்த்துத்தான் சைக்கிளை ஓட்ட வேண்டும்.

13. சாலையின் குறுக்கே கடக்க வேண்டும் என்றால், நின்று கவனித்தே கடக்க வேண்டும்.

14. திரும்ப வேண்டிய இடங்களில் (Curve) திரும்பும் பொழுது. அதற்குரிய சைகையைக் காட்டித்தான் திரும்ப வேண்டும்.

15. சைக்கிளில் செயின் முடியில்லாமல் இருக்கும் பொழுது, கட்டியிருக்கும் வேஷ்ட்டியோ, அல்லது முழுக்கால் சட்டையோ சிக்கிக் கொள்ளாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

16. நடக்கும் பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் உரிய வழியைக் கொடுத்தே சைக்கிள் ஓட்ட வேண்டும்.

17. இன்னொரு சைக்கிளை முந்தும்போது, வலப்புறமாகப் போய்தான் முந்த வேண்டும்.