பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



36

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தான்போகும் இடத்திற்குப் பத்திரமாகப் போய் திரும்பிவர வேண்டும் என்று எண்ணும் பாதுகாப்பான நினைவுடன்தான் சைக்கிள் ஒட்ட வேண்டும்.

எப்பொழுதும் அவசரப்படுவதும், பதட்டப்படுவதும் கூடவே கூடாது. நிதானமானது, எப்பொழுதும் திடமான மனதையும், நல்ல உடல் வலிமையையும், அருமையான ஆலோசனையையும் அளிக்கும்.

இனி, விரைந்து செல்லும் வாகனங்கள் ஒட்டுபவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு முறையினைக் காண்போம்.

4. வாகன ஒட்டுநர்கள் கவனிக்க

பள்ளி மாணவர்களுக்கு வாகனங்கள் ஒட்டுதற்குரிய வாய்ப்பு கிடையாது. ஏனெனில், வாகனங்கள் ஒட்டுவதற்கு 'ஒட்டும் உரிமம்' (Driving License) போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடமிருந்து தான் வாங்க வேண்டும்.

உரிமம் வாங்குவதற்கு வயது வரம்பு உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளில் 16 வயது என்று நிர்ணயித்திருக்கின்றார்கள். நம் இந்திய நாட்டில் 18 வயது என்பது விதிமுறை.

என்றாலும், வாகனம் ஓட்டுவதற்குரிய முறையினை ஒரு சிறிது அறிந்து கொள்வது, சாலையில் செல்லும் போது பாதுகாப்பினைப் பெற வழிவகுக்கும்.

1. விரைந்து செல்வதற்காகத் தான் வாகனங்களை