பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதுகாப்புக் கல்வி

37


பயன்படுத்துகிறோம். அதற்காக நமது மனோவேகத்திற்கு ஏற்ப, வண்டிகளை ஓட்டிக்கொண்டு போய்விடமுடியாது.

2. நாம் போகக் கூடிய சாலையின் மேடுபள்ள அமைப்பு, அங்கே அனுசரிக்கக்கூடிய சாலை விதிமுறைகள், அந்த இடத்தின் இயல்புக்கேற்ப மக்கள் கூட்டம், நெருக்கடி இவற்றை அனுசரித்துத்தான் ஓட்டிச் செல்ல முடியும். ஒ0ட்டிச் செல்ல வேண்டும்.

3. வாகனங்களை ஓட்டுவோருக்கு, நல்ல உடல்திறன், எப்பொழுதும் சலனமடையாத மனநிலை, ஆழ்ந்த மனக்கட்டுப்பாடு, சூழ்நிலையின் அபாயத்தை உணர்ந்து செயல்படும் முன்னறிவு (Anticipation) பதட்டப்படாத தன்னம்பிக்கை அனைத்தும் வேண்டும்.

4. ஓட்டுகின்ற ஒவ்வொருவரும், அந்த வாகனத்தின் அடிப்படை அமைப்புத் தன்மையை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

5. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் ஓடும் வாகனத்தை நிறுத்துகின்ற ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.

6. அதற்காக, வாகனத்தைத் தகுந்த தரமானநிலையில் சீர்படுத்தி செப்பனிட்டுப் பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும்.

7. 'பிரேக்' அமைப்பு எப்பொழுதும் சரியாக செயல்படும் தன்மையில் வைத்திருக்க வேண்டும்.

8. சாலை அமைப்புக்குறிகள், வளைவு, தரைப்பட