பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அமைப்புக்கள், ஒருவழிப் பாதை, நின்று கவனித்து ஓட்டும் முறைகளை அறிந்து, அத்துடன் காலநிலை ஒளிநிலை, சாலையின் வெளிநிலை, மக்கள் இயக்கநிலை இவைகளுக்கேற்ப, கவனமாக ஓட்ட வேண்டும்.

9. போதையுடன் ஒட்டுதல், உடல் நலமில்லாத போது ஒட்டுதல், மனக்குழப்பத்துடன் ஓட்டுதல் அனைத்தும், பயங்கர விபத்துகளுக்குப் பாதை வகுத்துவிடம்.

10. வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன், 'ஏதோ பெரிய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துவிட்டோம். உலகமே நம் கீழ்தான்' என்ற வெறித்தன்மையில் இருக்காமல், இந்தப் பாதுகாப்பு, தனக்கும், தன்குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் உள்ள ஒன்று என்ற நினைவுடன் பத்திரமாகவும் கவனமாகவும் ஓட்ட வேண்டும்.

11.அந்திநேரங்களில், ஒளிமங்கும் சமயங்களில்தான்அதிக விபத்துக்கள் நேர்வதாக அறிக்கைகள் கூறுகின்றன. மிகவும் கவனம் வேண்டும்.

12. அந்தி நேரங்களில் அவசரமில்லாமல் ஓட்டுவது நல்லது. பக்கத்தில் உள்ளவர்களோடு ஊர்க் கதைகளைப் பேசி உரையாடிச் செல்வதும், தூக்கம் வந்து, அதை சமாளித்துக் கொண்டு ஓட்டுவதும் பாதுகாப்புக்கு உகந்ததல்ல.

13. நடை பயணிகளையும், மற்ற சைக்கிள், வாகனங்களின் ஓட்டுநர்களையும் மதித்து, அவர்களுக்கும் வழிவிட்டு, பத்திரமாக ஒட்டிச் செல்வது சிறந்த பாதுகாப்பு முறையாகும்.