பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



40

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


விபத்துக்களின் பட்டியலில் பாதி இடத்திற்குமேல் பிடித்துக் கொண்டிருப்பது, வீட்டில் நடக்கும் விபத்துக்கள்தான்.

சமைக்கும்போது தீ, ஸ்டவ், வெடித்து சேலை பற்றி மரணம், விஷம் குடித்த குடும்பம் என்றெல்லாம் திடுக்கிடும் செய்திகளைப் படிக்கும்போது, இல்லங்களும், பாதுகாப்பற்றவைதானா என்று நமது உள்ளங்கள் வருந்துவதும் இயற்கைதான்.

விபத்து நிகழ்ந்ததை எண்ணி வேதனைப்படும் போது, விபத்துக்கள் உண்டாகும் விதங்களையும் புரிந்து கொண்டால், விபத்து நிகழாமல் முடிந்தவரை விலகி வாழலாம். விலக்கியும் வாழலாம். அதற்கு உள்ளத்தின் ஈடுபாடும், ஒழுங்குற வாழும் பண்பாட்டின் மேம்பாடும் தேவைதான்.

2. விபத்துக்குரிய காரணங்கள்

இல்லத்திலே நிகழும் விபத்துக்குரிய காரணங்களாக, நாம் இரண்டினைக் கூறலாம். (அ) சூழ்நிலை (ஆ) மனிதர்களின் தவறுகள்.

அ. சூழ்நிலை: வீட்டிலே விபத்துக்கள் நிகழ்கின்ற இடங்களாக, சமையல் அறை, குளிக்கும் அறை, படுக்கை அறை, மாடிப்படி, வழுக்கல் தரை முதலியவற்றைக் குறிக்கிறார்கள்.

இவற்றிலே, வழுக்கி விழுதல், இடறி விழுதல்,