பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதுகாப்புக் கல்வி

41


தீக்காயம் படுதல் போன்ற விபத்துக்கள் நேர்வதற்குரிய காரணமாக இல்லத்தின் சூழ்நிலை சில சமயங்களில் அமைந்து விடுகிறது.

ஆ. மனிதர்களின் தவறுகள்: மனிதன் தவறு செய்பவன்தான் என்ற பழமொழி இருந்தாலும், கவனக்குறைவாலும், அறியாமையாலும் தான் தவறுகளை மனிதர்கள் அதிகம் செய்கின்றனர்.

வேண்டுமேன்றே தவறு செய்பவர்கள். பழிக்குப் பழி வாங்கவேண்டும் அல்லது தன்னையே பலியாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நினைவுக்கு ஆட்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

தவறு நேர, பல காரணங்கள் உண்டு. வீட்டில் தலைவராக விளங்குபவர், வேலை செய்யும் அலுவலகத்திற்கும் பணம் திரட்டும் பணிக்குமாக அலையும்போது, குடும்பத்தின் முழுப் பொறுப்பும் அமைப்பும், குடும்பத் தலைவியின் மீதே விழுந்து விடுகிறது.

வீட்டிலே சமையல்காரியாக, வீட்டைச் சுத்தம் செய்வதில் வேலைக்காரியாக, துணிகளை தூய்மைப்படுத்தும் பணியில் சலவைக்காரியாக, துணிகளை பழுதுபார்க்கும் தையல்காரியாக, சில சமயங்களில் மருத்துவம் செய்யும் தாதியாக, மற்றும் தனது பிள்ளைகளுக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியையாகவும் ஒரு குடும்பத்தின் தலைவிக்கு பல பொறுப்புக்கள் அனுதினம் விளைகின்றன. அது நமக்கும் தெரியும்.