பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

43


வைத்து, உருண்டு கீழே விழதல்.

4. தண்ணீர் பட்டு பட்டு, தரையானது வழுக்கல் நிறைந்திருக்கும் போது, அதன்மேல் கால் வைத்து உதியில்லாமல் சறுக்கி விழுதல்.

5. புல்தரைமீது போகும்போது வழுக்கி விழுதல்.

6. வீட்டில் விரிக்கப்பட்டிருக்கும் சமுக்காளம், பாய் அல்லது கோணி கிழிசலில் கால் மாட்டிக் கொண்டு, போகும் அவசரத்தில் விழுதல்.

7. (குழந்தைகள்) ஒரு பொருளைத் தாண்டிச் செல்லும்போது நிலைமாறித் தடுமாறி விழுதல்.

8. தன்னால் தூக்க முடியாத பொருட்களைத் தூக்கிக்கொண்டு போகும்போது, தன் வசமிழந்து சாய்ந்துவிழுதல்.

9. வயதானவர்கள் நடைதடுமாறி கீழே விழுந்து விடுதல்.

இவ்வாறு விழவைக்கும் வாய்ப்புள்ள பகுதிகளை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகிச்செய்ய வேண்டும். அதற்கு முன்கூட்டி ஆயத்தமாகவே, வேறு சில முறைகளை, கீழ்க்காணும் நிலையில் செய்து பழகிக்கொள்ளவேண்டும்.

1. மேலே ஏறும் போது பத்திரமாக ஏறி இறங்கவும். பாதுகாப்புக்காக பக்கத்தில் யாரையாவது ஏணியையோ அல்லது ஏற உதவும் பொருட்களையோ பிடித்துக்