பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கொள்ளச் செய்யவும். தன்னை மறந்த நிலையில், மேலே நிற்கும்போது, இருக்கக்கூடாது.

2. குளியலறையின் தரையை அடிக்கடித் தேய்த்து, வழுக்காமல் பார்த்துக் கொள்ளுதல், அடிக்கடி சுத்தப்படுத்துதல் அவசியம்.

3. வீட்டுத் தரைப் பகுதிகளையும் வழுக்காமல் வைத்துக் கொள்ளவும்.

4. வீட்டில் பொருட்கள் கண்ட இடங்களில் இறைந்து கிடப்பதால் தான், தடுக்கி விழநேரிடுவதால், பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்துக்கொள்ளவும்.

5. இரவில் நடமாடும் போது, பொருட்கள் கீழே கிடப்பது ஆபத்துதான். ஆகவே, அப்பொழுது கவனமாக நடக்கவேண்டும். தட்டுமுட்டுச் சாமான்கள், மேசை நாற்காலிகள் வீட்டின் ஒரங்களில் வைக்கப்பட வேண்டும்.

6. எது எது துன்பம் தருமோ, அவற்றையெல்லாம் ஒதுக்கி, விபத்து நிகழாமல் தடுத்துக் கொள்ளவேண்டும்.

7. தாண்டிப் பழகி, கதவு நிலைகளில் தொங்கிப்பழகும் குழந்தைகளுக்கு விளையாடும் வாய்ப்பினை வெளிப்புற ஆடுகளங்களில் ஏற்படுத்தித் தரலாம்.

அடுத்து, தீப்புண் மற்றும் வெட்டுக் காயங்கள் போன்றவற்றினைப் பற்றி விளக்கமாகக் காண்போம்.

2. காயங்கள்: வீடுகளில் ஏற்படுகின்ற விபத்துக்