பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

45


களில் 1/5 பாகம் தீக்காயங்கள் என்று விபத்து அறிக்கைக் குறிப்பு ஒன்று கூறுகிறது. எரிபொருள், பிராணவாயு, வெப்பம் என்ற மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்குமிடத்தில், நெருப்புப் பிடிப்பதற்கான சூழ்நிலை மிக எளிதாக உருவாகிவிடும். ஆகவே இந்த மூன்றும் இருக்கும் இடங்களில், மிகவும் விழிப்புடன், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமைக்கும் போது சேலையில் தீப்பற்றுவது மிகவும் இயல்பாக நடக்கக்கூடிய விபத்தாக இன்றைய வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது.

1. ஸ்டவ் எரிந்துகொண்டு இருக்கும்போது அதற்குள் மண்ணெண்ணெய் ஊற்ற முயலுகையில், ஸ்டவ் கவிழ்ந்து தீப்பற்றிக் கொள்வது.

2. ஸ்டவ்வுக்கு காற்றடிக்கும் போது, கைத்தவறி கவிழ்ந்து, தீப்பிடித்துக் கொள்வது.

3. குழந்தைகள் தீப்பெட்டியை எடுத்துவைத்துக் கொளுத்திக் கொண்டு விளையாடுவது.

4. படுக்கையில் படுத்துக் கொண்டே புகை பிடித்துக் கொண்டு, அப்படியேதூங்கிப் போய்விடுதல்.

5. தீக்குச்சிகள் மற்றும் அடுப்பெரிக்கும் விறகுக் கொள்ளியை, அனைக்காமல் அப்படியே விட்டுவிடுதல்.

6. கேஸ் அடுப்பு வைத்திருப்பவர்கள், அதற்குப் பக்கத்தில் (Gas) கேஸ் இருக்கும் ஜாடியை வைத்திருத்தல்,