பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அது பழுதுபட்டிருந்தால், எளிதில் தீப்பற்ற வாய்ப்புஉண்டு.

7. பட்டாசு கொளுத்தி மகிழும் நேரங்களில் தீக்காயப்படுதல்.

8. அடுப்பில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அதன் மீது தண்ணீர்படுதல், அல்லது கொதிகலம் கவிழ்ந்து மேல் விழுதல்.

9. சோறு வெந்து கஞ்சி வடிக்கும் போது, பானை கவிழ்ந்து மேலே ஊற்றி விடுதல்.

இவ்வாறு தீக்காயங்கள் படும்போது, சாமர்த்தியமாக சமாளிக்கத் தேவைப்படுவது முன்யோசனையும் முதலுதவியுமாகும்.

முன் யோசனையும் முதலுதவியும்: உங்களது ஆடையில் தீப்பிடித்துக் கொண்டால், அங்குமிங்கும் ஓடக்கூடாது. அப்படி ஓடினால், ஆடை முழுவதும் தீப்பற்றவும், பொருட்களின் மீது தீ தாவவும் வழி ஏற்படும். ஆகவே, தீப்பிடித்தவுடன் தரையில் படுத்து உடனே புரளவும். உருளவும். கோணி அல்லது கனத்த சமுக்காளம் இருந்தால், அதனைப் போர்த்திக் கொண்டு உருளவும், வேறுயாருக்காவது இந்த நிலை வந்தால், இந்த முறையைத்தான் பின்பற்றச் சொல்லவும்.

தீயால் உண்டாகும் காயங்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. தோலை பாதிக்காத இலேசான காயம்.