பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

51


உணவுப் பண்டங்கள் எப்பொழுதும், சுகாதார முறைப்படி மூடித்தான் வைக்கப்பட வேண்டும்.

10. மேலும், குழந்தைகள் படுக்கையில் தூங்கும் போது, முரட்டுப் போர்வை எடுத்து முகமெல்லாம் மூடிக்கொண்டு தூங்கும்போது, துணி அழுத்தி, மூச்சு முட்டி இறந்துவிடுவதும் உண்டு.

11. உள்ளே குழந்தைகள் புகுந்துகொண்டு, தெரியாமல் தாங்களே பூட்டிக் கொண்டு, உள்ளே மூச்சுத் திணறி இறப்பதும் உண்டு

இதுபோன்ற காரியங்களில் எல்லாம், குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. மின்சாரத் தாக்குதல்கள்

மின்சாரத் தாக்குதல்கள் என்பது கொடுமையானதாகும். விளையாட்டாகவோ, பயிற்சி பெறுவதற்காகவோ, அல்லது சோதனை செய்து பார்க்கலாம் என்றோ,மன்சார சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் பழக்கம் இருந்தாலன்றி செய்யக்கூடாது.

அவ்வாறு ஏதேனும் செய்ய நேருங்கால், ரப்பர் கையுறைகளையும் ரப்பர் காலணிகளையும் உபயோகிக்க வேண்டும்.

ஆகவே, ஒளியைக் கொடுக்கும் மின்சாரமானது நம் உயிரைக் குடிப்பதற்கேற்ற வேலைகளில் நாம் இறங்கவே