பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

53


ஆதாரமாக அமைந்தும் விடுகிறது.

வீட்டுப் பாதுகாப்புதான் முதன்மையானது. அதிலிருந்துதான் நாட்டுப் பாதுகாப்பும் வலிமை பெறுகிறது.

குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முயல்வதால், பெற்றோர்களுக்கும் அந்தப் பொறுப்பும் இருப்பதால், பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் ஏற்ற முறையில் வாழ்ந்து காட்டவேண்டும்.

அதற்கேற்ற வகையில் பயன்படுமாறு, சில குறிப்புக்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

1. தாங்கள் பயன்படுத்துகின்ற பொருட்களின் தன்மையை நன்குணர்ந்து, அதற்கேற்றவாறு வகைப்படுத்திப் பயன்படுத்தவேண்டும்.

2 இல்லத்தினைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், வசதிமாக வாழும் வகையில் பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும்.

3. அறியாமையைவிட, அலட்சிய மனப் போக்கும் ஆர்ப்பாட்டமான நடத்தையும் தான் மிக ஆபத்தானதாகும்.

4. ஒழுங்கு முறையாக வாழ்வதை பயபக்தியுடன் போற்ற வேண்டும்.

5. தவறான முறையிலோ அல்லது குறுக்கு வழியிலோ எதையும் கையாளுகின்ற போக்கையும் அசவரத்தன்மையையும் முடிந்தவரை தவிர்த்துவிட